ETV Bharat / state

அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை: மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுகவினரைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

author img

By

Published : May 4, 2021, 5:32 PM IST

சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் அம்மா உணவகத்தை சூறையாடியுள்ளனர். மேலும், உணகவகத்திலுள்ள காய்கறிகள், பாத்திரங்களை சேதப்படுத்தி, அங்கிருந்த அம்மா பெயர் பலகைகளை உடைத்தனர்.

இந்த காணொலி சமூக வலைதளைங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமையப்போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, திமுகவினர் வன்முறையும், அரசியல் அநாகரீகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை, ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல. அம்மா படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஜெயக்குமார் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.