சென்னை : தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமம், அப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின் போது மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாகத் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
கூடுதல் நிவாரணம், சிகிச்சை அளிக்க கோரிக்கை: 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
தஞ்சாவூர் - களிமேடு தேர் விபத்து செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை செலுத்துக் கொள்வதோடு, அப்பகுதி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #Tanjore #TanjoreFireAccident pic.twitter.com/BNP9AzDO9d
— O Panneerselvam (@OfficeOfOPS) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தஞ்சாவூர் - களிமேடு தேர் விபத்து செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை செலுத்துக் கொள்வதோடு, அப்பகுதி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #Tanjore #TanjoreFireAccident pic.twitter.com/BNP9AzDO9d
— O Panneerselvam (@OfficeOfOPS) April 27, 2022தஞ்சாவூர் - களிமேடு தேர் விபத்து செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை செலுத்துக் கொள்வதோடு, அப்பகுதி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #Tanjore #TanjoreFireAccident pic.twitter.com/BNP9AzDO9d
— O Panneerselvam (@OfficeOfOPS) April 27, 2022
படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் நிவாரணம் வழங்குமாறும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவர்களுக்கு உயரிய மருத்துவச் சிகிச்சை அளித்து அதற்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அப்பர் மடம் தேரோட்டம்: தஞ்சாவூர் மாவட்டம் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை (ஏப்.22) தொடங்கியது.
வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. இதனிடையே, இன்று (ஏப்.27) அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்