ETV Bharat / state

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்.. தனி வாரியம் அமைக்க கேரள அரசை ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் - ஓபிஎஸ்

O.Panneerselvam: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி ஐயப்பனை தரிசனம் செய்யவும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தனி வாரியம் அமைக்க கேரள அரசிடம் வேண்டுகோள் வைக்குமாறு, திமுக அரசை வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

O.Panneerselvam
ஓ.பன்னீர்செல்வம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 12:34 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதியினை முன்னிட்டு, சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனை தரிசிக்க இந்தியா முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், இந்த ஆண்டு மகர ஜோதியினை முன்னிட்டு, தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர்.

  • சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தனி வாரியம் அமைக்க கேரள அரசிடம் வேண்டுகோள் வைக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/DTSPx1Nk2q

    — O Panneerselvam (@OfficeOfOPS) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் திருக்கோயில் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. சபரிமலையில் உள்ள ஐயப்பனைத் தரிசிக்க வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சென்றாலும், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். தற்போது இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல மட்டும் 20 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும், கூண்டுகளில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட எவ்வித உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை என்றும், கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், முறையான வரிசை பராமரிக்கப்படவில்லை என்றும், சில நேரங்களில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு பக்தர்கள் ஆட்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதாவது, சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிலர் இறந்து விட்டதாகவும், ஆனால் இது குறித்த செய்தி வெளி வருவதில்லை என்றும் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாநிலங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கும் முதலமைச்சர், சபரிமலையில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதையும், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதையும் பற்றி குரல் கொடுக்காதது வியப்பாக இருக்கிறது. இனி வருங்காலங்களில் இது போன்ற நிலைமை ஏற்படாத வகையில், திருமலையில் இருப்பது போன்று, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஓர் வாரியத்தினை சபரிமலையில் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை, கேரள அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுக்க வேண்டுமென்று, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராணிப்பேட்டை அருகே பொங்கல் சிறப்பு பேருந்து விபத்து; 15 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.