இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த மருத்துவர் சண்முகப்பிரியா, சென்னை ராஜீவ்காந்தி, வேலூர் அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்த இந்திரா, பிரேமா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன்.
கர்ப்பிணியாக இருந்த போதிலும் தன்னலம் கருதாது மக்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் சண்முகப்பிரியா, மக்கள் நலன்காக்க உழைத்த செவிலியர்கள் இந்திரா, பிரேமா ஆகியோரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
கரோனாவை எதிர்கொண்டு உயிர்காக்கும் பணியில் அஞ்சாது ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். இது போன்ற இழப்புகள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!