ETV Bharat / state

மனு கொடுக்க வந்தவர்களைக் கைது செய்த காவல் துறை: காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கிய செவிலிய உதவியாளர்கள்! - செவிலியர் உதவியாளர்கள்

படித்துவிட்டு பத்தாண்டுகளாக பணி கிடைக்காமல் இருக்கும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளிக்க வந்த செவிலிய உதவியாளர்களை காவல் துறையினர் கைது செய்ததால் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

nursing-assistant-protest-in-teynampet
மனு கொடுக்க வந்த செவிலியர் உதவியாளர்களை கைது செய்த காவல்துறை!
author img

By

Published : Jul 13, 2021, 11:59 AM IST

Updated : Jul 13, 2021, 2:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு முதல் செவிலிய உதவியாளர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ கல்வித்துறையால் வழங்கப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்களூக்கு அரசு மருத்துவமனைகளில் பணியின்போது முன்னுரிமை வழங்கப்படும் எனக் கருதி செவிலியர் உதவியாளர் பயிற்சியில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் செவிலிய உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வந்தனர். இதனால், முறைப்படி பயிற்சி முடித்த செவிலிய உதவியாளர்கள் யாருக்கும் பணி கிடைக்கவில்லை.

காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கிய செவிலிய உதவியாளர்கள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அவலம்

தற்போது, திமுக ஆட்சிக்கு வந்துள்ளநிலையில், முதலமைச்சரையோ அல்லது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைக்கு வந்தனர்.

அவர்களை தேனாம்பேட்டை அறிவாலயம் செல்வதற்கு முன்பாக காவல் துறையினர் தேடிப் பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காத்திருப்புப் போராட்டத்தில் செவிலிய உதவியாளர்

இதனை அறிந்த செவிலிய உதவியாளர்கள் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

nursing_assistant protest in teynampet
மனு கொடுக்க வந்த செவிலியர் உதவியாளர்களை கைது செய்த காவல்துறை!

இதுகுறித்து பேசிய செவிலிய உதவியாளர், "2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது செவிலிய உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்தப் பயிற்சி முடித்த ஆயிரம் நபர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்த சுமார் பத்தாயிரம் பேர் உள்ளோம்.

ஆனால், எங்களுக்குப் பணி வழங்காமல் ஒப்பந்த அடிப்படையில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கி உள்ளனர்.

மனு கொடுக்க வந்தவர்களைக் கைது செய்த காவல் துறை

முறையான பயிற்சி பெறாமல் பணியில் ஈடுபட்டு வரும் இவர்களால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

ஒப்பந்தப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, அடிபட்ட இடங்களில் தையல் போடுவது போன்ற பணிகளில் பயிற்சியின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பணி இல்லாமல் காத்திருக்கும் தங்களுக்குப் பணி வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

மனு கொடுக்கக்கூட அனுமதிக்காமல் செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்களை காவல் துறையினர் தேடி தேடி கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நோயாளியின் பணத்தை திருப்பிக் கொடுத்த 108 வாகன செவிலியர்!

Last Updated : Jul 13, 2021, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.