ETV Bharat / state

கரோனா மீட்பு நடவடிக்கை, முதலமைச்சருக்கு அமைச்சர் பாராட்டு! - Minister Kamaraj

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62 விழுக்காடு உயர்ந்துள்ளது என அமைச்சர் காமராஜ் தெவித்துள்ளார்.

minister-kamaraj
minister-kamaraj
author img

By

Published : Jul 7, 2020, 12:43 AM IST

Updated : Jul 7, 2020, 1:36 AM IST

சென்னை கோடம்பாக்கம், அண்ணாநகர் மண்டல பகுதிகளில் செயல்படும் மருத்துவ முகாம்களை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதையடுத்து அவர் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் மற்றும் கரோனா விழிப்புணர்வு கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

அவருடன் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்யா, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் எஸ். வினீத், கோபால சுந்தர ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ் முத்துசுவாமி, ஐபிஎஸ் அலுவலர்கள் கே.மீனா, சி. கலைசெல்வன், எஸ். சாந்தி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரத்து 712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 8 லட்சத்து 20ஆயிரத்து 358 பேர் பயனடைந்துள்ளனர்.

அதில் 38 ஆயிரத்து 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால்
பாதிக்கப்பட்டவர்களில் 62 விழுக்காட்டினர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது.

உதாரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 நாள்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தெருக்கள் 2ஆயிரத்து 414 இருந்தது. ஆனால் தற்போது 990 தெருக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீடுகளுக்குச் சென்று நியாய விலைக்கடை டோக்கன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் 10ஆம் தேதி முதல் அத்தியாவசிய பொருள்களை வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

Last Updated : Jul 7, 2020, 1:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.