ரயில் பயணச்சீட்டு முன்பதிவிற்கான காலம் 90 நாட்களிலிருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியுள்ளது.
ரயில்வே துறை அறிவிப்பின்படி, 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவிற்கான தேதிகள்
ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு -செப்டம்பர் 12
ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு- செப்டம்பர் 13
ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு- செப்டம்பர் 14
ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு- செப்டம்பர் 15
ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு- செப்டம்பர் 16
இதையடுத்து, ஜனவரி பத்தாம் தேதிக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் வழக்கம் போலவே முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களின் பயணச்சீட்டுகள் சில நிமிடங்களில் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.