ETV Bharat / state

அனைத்து வீடுகளிலும் இணைய வசதி -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

author img

By

Published : Aug 27, 2019, 5:18 PM IST

சென்னை: மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டின் அனைத்து இல்லங்களிலும் இணையம் வழங்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

rb.udhayakumar

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தை வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இணையம் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளின் இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மத்திய அரசின் உதவியோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணைய திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

*அரசு அலுவலங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்*

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார் பின்னர் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து அரசு அலுவலங்களிலும் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

 முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட இல்லந்தோறும் இணையம் திட்டத்தின் மூலம்  அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளின் இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் மத்திய அரசின் உதவுயோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணையம் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் சான் பிரான்சிஸ்கோவில் செயல்படுத்தப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பங்களை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Visuals are sent by Mojo kit
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.