சென்னை: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிய போது 2020 - 2021 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சி.பி.எஸ்.இ சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ், மதிப்பெண்களின்றி வழங்கப்பட்டது. 'ஆல் பாஸ்' பெற்ற, 10-ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றனர். இவர்கள் உயர்கல்வி படிக்க ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ(JEE) தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
ஜனவரி 24 முதல் 31 வரை, ஜே.இ.இ தேர்வு நடக்கிறது. இம்மாதம், 15 முதல் ஜனவரி 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அல்லது தர நிலையை குறிப்பிட வேண்டியது கட்டாயம். மாநில பாடத் திட்டத்தில், 'ஆல் பாஸ்' பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழில் மதிப்பெண்ணோ, தரநிலையோ வழங்கப்படவில்லை. அதனால், இந்த மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.
இதுகுறித்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டது. அதன் பின்னர் அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தேசிய தேர்வு முகை ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் 011-40759000 மற்றும் 011-69227700 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
-
ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது!(1/4)#IITJEE
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது!(1/4)#IITJEE
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 24, 2022ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது!(1/4)#IITJEE
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 24, 2022
இதனிடையே தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஒரு விரல் புரட்சி' வைரலாகும் அரசு பள்ளி மாணவி பாடல்!