சென்னை: மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதியினை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், JEE, CUET (UG) உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்த விபரங்களையும் அறிவித்துள்ளது.
-
National Testing Agency(NTA) releases Examination Calendar for Academic Year 2024-25 for some major examinations. pic.twitter.com/3m5BXaVzUY
— National Testing Agency (@NTA_Exams) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">National Testing Agency(NTA) releases Examination Calendar for Academic Year 2024-25 for some major examinations. pic.twitter.com/3m5BXaVzUY
— National Testing Agency (@NTA_Exams) September 19, 2023National Testing Agency(NTA) releases Examination Calendar for Academic Year 2024-25 for some major examinations. pic.twitter.com/3m5BXaVzUY
— National Testing Agency (@NTA_Exams) September 19, 2023
இது குறித்து தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025ஆம் கல்வியாண்டில் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும். JEE முதன்மை தேர்வு பகுதி-1 2024 ஜனவரி 24 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி வரையிலும், JEE முதன்மைத் தேர்வு பகுதி-2 ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 15ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது கம்பியூட்டர் முறையில் நடைபெறும்.
மருத்துவப் படிப்பில் இளங்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 2024 மே 5ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வானது ஒஎம்ஆர் ஷீட் மூலம் மாணவர்கள் பேப்பர், பேனா பயன்படுத்தி எழுதலாம். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் (CUETUG) 2024 நுழைவுத் தேர்வு மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிகளுக்குள் கம்பியூட்டர் பயன்படுத்தி நடைபெறும். மத்திய அரசு கல்வி நிலையங்களில் முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் (CUET UG) 2024 நுழைவுத் தேர்வு மார்ச் 11 மற்றும் மார்ச் 28ஆம் தேதிகளிலும் கம்ப்யூட்டர் மூலம் நடைபெறும்.
யுஜிசி நெட் தேர்வு ஜூன் 10 மற்றும் ஜூன் 21ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான (CUETUG) 2024 நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31ஆம் தேதிகளுக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள், தேர்வுகள் முடிவடைந்த அடுத்த மூன்று வார காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு மிதனமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!