சென்னை: தலைமைச் செயலகத்தில் குத்தகை பாக்கி தொகையைத் தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்து வரும், குடியிருப்பு மனை உரிமையாளர்களின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, மாற்று இடமில்லாமல் வசிக்கும் மக்களுக்கு அரசே 5 சென்ட் இடத்தை வாங்கி, இலவச பட்டா வழங்கி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.
கோயில் நிலங்களில் குடியிருப்போர் மின் இணைப்பு பெறுவதற்கும், நகராட்சியில் வீட்டு வரி பெறுவதற்குத் தொழில் தொடங்குவதற்கும் தடையில்லா சான்று வழங்க வேண்டும். அதே போல் கோயில் நிலங்களில் குடியிருப்போர்க்கு வாடகை திருத்த நிர்ணயம் செய்ய வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரட்டை பதவி விவகாரத்தில் ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி