ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்! - caste wise census

சாதியில்லா சமுதாயத்தை நோக்கிச் செல்லும்போது, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Dec 18, 2020, 1:29 PM IST

சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆனந்தபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டங்கள் நடத்திவருகின்றனர்" எனக் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சில சாதிகள் சார்பில்தான் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், சாதியில்லா சமுதாயத்தை நோக்கிப் பயணிக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாதிவாரியாகப் புள்ளி விவரங்களைச் சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கரோனா மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.