சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்ற மாதம் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 5ஆம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நிறைவுபெற்றது.
அதன்பின்னர் தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.
50 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களே நிறைவு
அதன்படி, அண்ணாப் பல்கலைக்கழக கிண்டி வளாகம், மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.
நெல்லை மற்றும் பர்கூரில் உள்ள அரசு கல்லூரிகள் உள்ளிட்ட 11 கல்லூரிகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில் 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
ஒருஇடம் கூட தேர்வு செய்யப்படாத கல்லூரிகள்
71 கல்லூரிகளில் ஒரு இடம் கூட மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு 2ஆம் சுற்றில் 20,438 மாணவர்கள் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், எஸ்எஸ்என் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, பிஎஸ்ஜி, அழகப்பா கல்லூரி, சிஐடி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி சிஇசிஆர்ஐ உள்ளிட்ட 15 கல்லூரிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேலான இடங்கள் நிரம்பியுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 331 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்