ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி -காவல் துறை விசாரணை!

சென்னை: சந்தேகத்திற்கிடமான முறையில் கழிவுநீர் தொட்டியில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

North inadian worker dies in septic tank  North inadian worker dies in septic tank in adyar  chennai septic tank deaths  septic tank deaths  வடமாநிலத் தொழிலாளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழப்பு  கழிவுநீர் தொட்டி உயிரிழப்புகள்
North inadian worker dies in septic tank
author img

By

Published : Dec 12, 2020, 9:32 AM IST

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரத்தன் (வயது 52). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ரத்தன், அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், அன்னை நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கொரட்டூர், பரணி ஜோதி நகரிலுள்ள தனியார் சமையல் கூடத்திற்குச் சொந்தமான கழிவுநீர் தொட்டியில் ரத்தன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கொரட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரத்தன் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகு தான், ரத்தனின் இறப்பு குறித்த விபரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி உயிரிழப்பு விவகாரம் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.