ETV Bharat / state

வேலைநிறுத்த நாளன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால்... தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! - வேலைநிறுத்தம் நாளன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால்

வேலைநிறுத்தம் நடைபெறும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம்
வேலைநிறுத்தம்
author img

By

Published : Mar 25, 2022, 9:31 PM IST

சென்னை: எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக்கண்டித்து மார்ச் 28, 29ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கெனவே வேலை நிறுத்தப்போராட்டத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளப்பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 25) தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "அரசு ஊழியர்கள் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது. அன்றைய தினங்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொண்டி அருகே சங்ககால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.