சென்னை நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தானியங்கி வடிகட்டி அலகுகள் ( Travelling band screen ) பொருத்தும் பணி 17.03.20 ம் தேதி முதல் 01.04.20 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈச்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு 17.03.20ஆம் தேதி முதல் அடுத்த15 நாள்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும் குறிப்பிட்ட இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக 15 நாள்களுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகளில் தண்ணீர் பெற்றுக்கொள்ள அந்தந்தப் பகுதி குடிநீர் வாரிய பொறியார்களை தொடர்புகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.