கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக்கு எதிராகவும், பொது மக்கள் ஒற்றுமையைக் காட்டும் விதமாகவும், ஒரே நேரத்தில் அனைவரும் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட்டை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
ஒரே நேரத்தில் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, மீண்டும் இயக்கினால் மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு மின்சாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், நேற்றிரவு சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மின் விளக்குகள் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டு மீண்டும் ஒரே நேரத்தில் போடும்போது, எந்தப் பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றினர். இதனால், மின் விளக்குகள் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.
மேலும், நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறைந்திருக்கிறது. தென் மண்டலத்தில் 6,600 மெகா வாட் மின்சாரம் குறைந்திருக்கிறது. சிறப்பாக, ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி” என்றார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!