தமிழ்நாடு மின் வாரியத்தால் தினந்தோறும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு பகுதியிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவிவருவதுடன், உயிர் இழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இதனால் கரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதிவரை சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.