ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளில் நேரம் மாற்றம் செய்வது குறித்து எந்த திட்டமும் இல்லை:அமைச்சர் முத்துசாமி

author img

By

Published : Jul 12, 2023, 8:01 PM IST

டாஸ்மாக் கடைகளில் நேரம் மாற்றம் செய்வது குறித்து எந்த திட்டமும் இல்லை என சென்னையில் அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார்.

no-plan-to-change-timings-in-tasmac-shops-minister-muthuswamy-info
டாஸ்மாக் கடைகளில் நேரம் மாற்றம் செய்வதில் எந்த திட்டமும் இல்லை:அமைச்சர் முத்துசாமி

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''டாஸ்மாக் கடைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வழக்கம் போல கடைகள் மதியம் 12 மணிக்குத் திறக்கப்படும். இரவு 10 மணிக்கு மூடப்படும்.

அரசின் கொள்கைக்கு முரணாக உள்ள கோரிக்கைகளை மட்டும் ஒதுக்கிவிட்டு, மற்ற பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக்கில் வேலை செய்யும் நபர்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. அதனை தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். டாஸ்மாக்கில் நேரம் மாற்றம் செய்வதில் எந்த திட்டமும் இல்லை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ''டாஸ்மாக் கடைகளில் பில் வழங்குவதைப் பொறுத்தவரை கடையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. அதனால் பில்லிங் அமைக்க முடியாத சூழல் உள்ளது.

புதிதாக இடம் மாற்றம் செய்து கடைகள் அமைக்கும் நேரத்தில் 500 சதுர அடிக்கு மேல் கடையின் அளவு இருக்க வேண்டும் எனத்தெரிவித்து உள்ளோம். மேலும் இடம் பெரிதாக உள்ள கடைகளில் பில்லிங் மெஷின் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில இடங்களில் மட்டுமே இந்தப் பிரச்னை நீடிக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் தொடர்பாக 18 சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. 90 மில்லி பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்'' எனத் தெரிவித்தார்.

வீட்டு வசதி துறையைப் பற்றி பேசிய அமைச்சர், ''நீண்ட நாட்களாக விற்பனை பத்திரம் கொடுக்கப்படாமல் இருந்தது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முகாம் நடத்தி விரைந்து விற்பனை பத்திரங்களை வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தார். தற்போது 12,120 விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு மனுக்களை ஆய்வு செய்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார்கள். இதன் மூலம் 20 ஆண்டுகளாக உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். குறைந்தபட்சம் 2 ஏக்கர் அல்லது அதற்கு மேல் இடம் உள்ள இடங்களில் முன் மாதிரியான கட்டங்களை கட்ட முடிவு செய்யத் திட்டமிட்டு உள்ளோம்.

வீட்டு வசதி வாரியம் சார்பில் 16 இடங்களில் புகார் பெட்டிகள் கடந்த ஜூன் 3 முதல் 30ஆம் தேதி வரை பெறப்பட்டது. அந்த வகையில் 4758 மனுக்கள் வந்துள்ளது. தொடர்ந்து மனுக்கள் வழங்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை மனுக்கள் பெற உள்ளோம். வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வாடகைக்கு விடப்பட்டு இருந்த 10 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளது என செய்தி அறிந்தவுடன் அவை அனைத்தையும் முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டி வருகிறோம்.

10 ஆயிரம் வீடுகள் இருந்த இடத்தில் தற்போது 30 ஆயிரம் வீடுகள் கட்ட முடியும் என்பதால், 30 ஆயிரம் வீடுகள் வரை கட்டப்பட்டு வருகிறது. அவை வாடகைக்கு மட்டும் இல்லாமல் விற்பனையும் செய்ய முடிவு செய்து உள்ளோம்'' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :"அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு" - முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.