ETV Bharat / state

ரவுடிகளுக்கு பாஜகவில் இடமில்லை - தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

author img

By

Published : Oct 19, 2020, 12:25 AM IST

சென்னை: ரவுடிகள் தொடர்ந்து கட்சியில் இணைவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

சென்னை தாம்பரத்தில் தனியார் ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் பாஜக துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தேய்ந்து வருகிறது.

இளைஞர் அதிகளவில் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். பிரதமரின் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேரூன்றுவதை பார்க்கலாம்" என்றார்.

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சில தவறுகள் நடந்திருக்கலாம், அவர்களுக்கு பாஜகவில் இடமில்லை. இளங்கலை மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜக ஆதரிக்கிறது. பாஜக தேசிய தலைவர் நட்டா அமைச்சராக இருந்த போதே அதனை வரவேற்பதாக பேசி இருக்கிறார்

இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். நிச்சயம் அவர் நல்ல முடிவை எடுப்பார், நல்லது நடக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவை வைத்து ஊழல் செய்யும் அதிமுக அரசு - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.