ETV Bharat / state

பி.இ, பி.டெக் கலந்தாய்வில் 124 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை! - engineering councelling

councelling
councelling
author img

By

Published : Oct 21, 2020, 11:11 AM IST

Updated : Oct 21, 2020, 6:08 PM IST

11:04 October 21

சென்னை: பொறியியல் படிப்பில் 2 சுற்றுகளின் முடிவில் 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட கலந்தாய்வின் மூலம் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பி.இ, பி.டெக் கலந்தாய்வில் 124 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை!

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான  கலந்தாய்வில், ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1,12,406 தகுதிப்பெற்ற மாணவர்களே உள்ளனர். தொழிற்கல்வியில் அக்டோபர் 8 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்விற்கு, 1,533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 946 பேர் மட்டும் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். பொறியியல் படிப்பு பொதுக்கலந்தாய்வு அக்டோபர் 8 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 1,10,873 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்கலந்தாய்வில் முதல் சுற்று தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற, 12,263 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10,200 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தினர். இவர்களில் 7,510 மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்று தரவரிசைப் பட்டியலில் 174.75 முதல் 145.5 வரையில் கட் ஆஃப் பெற்ற 22,904 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 13,415 மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

மூன்றாவது சுற்று தரவரிசைப் பட்டியலில் 145 முதல் 111.75 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற, 35,132 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளை பதிவு செய்துள்ளனர். 22 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கபப்படுகிறது.

நான்காவது சுற்று தரவரிசைப் பட்டியலில் 111.5 முதல் 77.5 வரை கட் ஆஃப் பெற்ற 40,572 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 23 ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்பில் உள்ள காலியிடங்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், ” தமிழகத்தில் உள்ள 461 கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 689 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2 ஆவது சுற்று முடிவில் 20 ஆயிரத்து 925 இடங்கள் அதாவது 30% இடங்களே பூர்த்தியாகி உள்ளன. 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட இடங்களை தேர்வு செய்யவில்லை. ஒரு சதவீதத்திற்கும் கீழ் 221 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது.  

347 கல்லூரிகளில் உள்ள இடங்களில் 5 சதவீதத்திற்கும் கீழ் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். 75 சதவீத கல்லூரிகளில் 5 சதவீதம் கூட மாணவர்கள் இடங்களை தேர்வு செய்யவில்லை. இந்தாண்டு 40% மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்தாண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பு, தகவல் தொழில்நுட்பம், கணிணி அறிவியல் ஆகிய பாடங்களை தேர்வு செய்து வருகின்றனர் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: TET தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்...! 

Last Updated : Oct 21, 2020, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.