ETV Bharat / state

'தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை' - மக்கள் நல்வாழ்வுத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பு இல்லையெனவும், 2 ஆயிரத்து 181 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை
மக்கள் நல்வாழ்வுத்துறை
author img

By

Published : Feb 16, 2020, 11:54 PM IST

மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 26 நாடுகளில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சீனா, ஹாங்காங், தாய்லாந்த், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி,மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் தற்போது 16 ஆம் தேதி வரை 45 ஆயிரத்து 180 பயணிகள் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 181 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆரம்பிக்கப்பட்ட தனி வார்டுகளில் தற்போது எந்த பயணியும் சிகிச்சையில் இல்லை. 43 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. மேலும், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் 39 பயணிகளின் ரத்த மாதிரிகளும், பூனேவிலுள்ள தேசிய வைரல் நோய் தடுப்பு நிறுவனத்தில் நான்கு பயணிகளின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்மட்டக்குழு அமைக்க திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.