ETV Bharat / state

'டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை' - சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் - சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை

சென்னை: நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

chief-of-mmc
author img

By

Published : Sep 9, 2019, 2:45 PM IST

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவ மாணவர்கள் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கு செய்ய வேண்டியவை குறித்தும், காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் நாடகம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெயந்தி, பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் போன்றவற்றிக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது என்றார். அரசு மருத்துவமனையில் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 40 பேர் புறநோயாளிகளாகவும், 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி செய்தியாளர் சந்திப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் கொண்ட ஆண், பெண் தனி வார்டுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய தட்டணுக்கள் குறைபாட்டை சரி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.

Intro:டெங்குவால் யாரும் உயிர் இறக்கவில்லை

Body:டெங்குவால் யாரும் உயிர் இறக்கவில்லை

சென்னை,
டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது மருத்துவ மாணவர்கள் டெங்குநோய் வராமல் தடுப்பதற்கு செய்ய வேண்டியவை குறித்தும்,காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் நாடகம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெயந்தி, பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் போன்றவற்றிக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 40 பேர் புறநோயாளிகளாகவும், 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை கொண்ட ஆண், பெண் ஆகியோர் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காய்ச்சல் சிகிச்சை பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய தட்டணுக்கள் குறைபாட்டினை சரி செய்வதற்கான வசதிகளும் உள்ளன. இந்தாண்டு டெங்கு நோயால் இதுவரை யாரும் உயிர் இறக்கவில்லை என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.