ETV Bharat / state

கரோனா ஊரடங்கு: வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்! - சென்னை விமான நிலையம்

சென்னை: ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று (மே 11) சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது.

கரோனா ஊரடங்கு
கரோனா ஊரடங்கு
author img

By

Published : May 11, 2021, 2:48 PM IST

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நேற்றிலிருந்து (மே 10) வரும் 24ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் பலரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களாகவே தங்களை வீடுகளில் முடக்கிக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பயணிகள் பலர் கரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை.

கூட்டிற்குள் அடைப்பட்டதுபோல், சில மணி நேரம் விமானத்திற்குள் இருக்கும்போது, அதில் யாராவது ஒரு பயணிக்கு பாசிட்டிவ் இருக்குமேயானால், அது பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது என்று பயணிகள் நினைக்கின்றனர். இதனால்தான் விமானப் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (மே 11) உள்நாட்டு விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து இன்று 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் 2 ஆயிரத்து 400 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

அதைப்போல் சென்னைக்கு வரும் 40 உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 300 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மொத்தம் 78 விமானங்களில் 3 ஆயிரத்து 700 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

கரோனா தொற்று முதல் அலை ஊரடங்கின்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது கடந்தாண்டு மே 25ஆம் தேதியிலிருந்து மீண்டும் சென்னையில் உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடந்துவருகிறது. அதிலிருந்து இதைப்போல் குறைந்த பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையம் செயல்படுவது இன்றுதான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் 62 விமானங்கள், சென்னைக்கு வரும் 64 விமானங்களும் அடங்கும்.

அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று 2 வந்தே பாரத் விமானங்கள், 6 சிறப்பு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து டெல்லி வழியாக சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.