ETV Bharat / state

சென்னை மின்சார ரயிலில் ஏசி பெட்டிகள் இல்லை - ராஜேஷ் அகர்வால் திட்டவட்டம் - ஐசிஎப்

சென்னை: "மின்சார ரயிலில் ஏசி பெட்டிகள் இயக்குவதற்கு தென்னக ரயில்வே முன் மொழியாததால், சென்னையில் இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை" என்று, ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

File pic
author img

By

Published : May 21, 2019, 8:46 PM IST

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தலைமை அலுவலகத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால், ஐசிஎப் பொதுமேலாளர் ராகுல் ஜெயின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராஜேஷ் அகர்வால் கூறியதாவது, 12 பெட்டிகளுடன் கூடிய 12 ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்களை நடப்பாண்டு ஐசிஎப் தயாரிக்க இருக்கிறது. இவை சென்னைவாசிகளின் பயன்பாட்டிற்கு தற்போது வருவதற்கான சாத்தியம் இல்லை.

ராஜேஷ் அகர்வால் - செய்தியாளர்கள் சந்திப்பு

தென்னக ரயில்வே சார்பாக மின்சார ரயிலில் ஏசி பெட்டிகள் இயக்க முன் மொழியாத காரணத்தால் சென்னையில் இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தாண்டு மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை புதிதாக தொடங்க இருக்கிறது. அதே போல் சென்னை-பெங்களூரு இடையே புதிதாக அதிவேக விரைவு ரயில் திட்டம் இல்லை.

சென்னை மெட்ரோ ரயிலுக்கான ரயில் பெட்டியை தயாரிப்பது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை இதுவரை கேட்கவில்லை. ஒருவேளை கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

Intro:சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தலைமை அலுவலகத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார்

Body:சென்னை மின்சார ரயிலில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க தற்போது சாத்தியமில்லை என ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தலைமை அலுவலகத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் மற்றும் ஐசிஎப் பொது மேலாளர் ராகுல் ஜெயின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர் 12 பெட்டிகளுடன் கூடிய 12 ஏசி வசதி கொண்ட ரயில்களை நடப்பாண்டு ஐசிஎப் தயாரிக்க இருப்பதாகவும், இவை சென்னைவாசிகளின் பயன்பாட்டிற்கு தற்போது வருவதற்கான சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
தென்னக ரயில்வே சார்பாக ஏசி பெட்டிகள் இயக்க முன் மொழியாத காரணத்தால் சென்னையில் இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என கூறிய அவர்
இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை புதிதாக தொடங்க இருப்பதாகவும் மேலும் இந்த ஆண்டு சென்னை-பெங்களூரு இடையே புதிதாக அதிவேக விரைவு ரயில் திட்டம் இல்லை என்றும் கூறினார் .
டெல்லி வாரணாசி இடையே கடந்த ஆண்டு விடப்பட்ட வந்த பாரத் விரைவு ரயில் எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் சென்னை மெட்ரோ ரயிலுக்கான ரயில் பெட்டியை தயாரிப்பது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை இதுவரை கேட்கவில்லை என்று கூறிய ராஜேஷ் அகர்வால் ஒருவேளை கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.