ETV Bharat / state

என்.எல்.சி நில கையகப்படுத்தும் விவகாரம் - அன்புமணி, வேல்முருகன் உள்ளிட்டோர் கடும்எதிர்ப்பு - சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழித்தேவன்

என்எல்சி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஒரு ஆட்சியராக செயல்படவில்லை, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் என்றும்; வேளாண்மை பாதுகாப்புத்துறை அமைச்சர் விவசாயத்தை அழிக்கக் கூடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

NLC ISSUE
NLC ISSUE
author img

By

Published : May 2, 2023, 10:41 PM IST

சென்னை: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தொழில்கள் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை உள்ளிட்ட முக்கிய சிக்கல்கள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மேலும் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்மொழித்தேவன், வேல்முருகன், சபா ராஜேந்திரன், மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர், மின்வாரியத்தலைவர் மற்றும் நில நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக ஆணையர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4.50 மணியளவில் தொடங்கி 6.30 மணி வரை நடைபெற்றது.

பின்னர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழித்தேவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'இந்தக் கூட்டத்தில் என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து உள்ளேன். இந்தக் கூட்டத்திற்கு விவசாயிகள் முக்கியமானவர்கள். ஆனால், இந்தக் கூட்டத்திற்கு விவசாயிகள் வந்தால் பெரிய பிரச்னை நடைபெறும் என எண்ணிக்கொண்டு விவசாயிகளை அழைக்கவில்லை. இந்தக் கூட்டத்திற்கு விவசாயிகளை அழைத்திருந்தால் ஒரு முழுமையான கூட்டமாக இருந்திருக்கும். அப்பகுதியில் இருக்கும் விவசாய மக்கள் மிகவும் பாடுபட்டு வருகின்றனர்.
எல்லோருக்கும் ஒரே விதமாக இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு என்எல்சி மூலம் வேலைவாய்ப்பு கிடையாது என்பது உறுதி. 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட நிரந்தர வீடு வழங்கவில்லை. அப்பகுதிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை.
என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு BE-படித்த இளைஞர் ஒரு மாடு வளர்ப்பது, அதன் கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என என்எல்சி நிறுவனம் தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி நிறுவனத்தில் MBA-படித்த பெண் ஒருவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை அந்த நிறுவனத்தில் கொடுக்கவில்லை.
அந்த நிலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய நிலைமை மாறி வருகிறது. இப்படியே சென்றால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு இடம் கிடைக்காது, என ஐ.நா. சபை சொல்லி மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனம் சொல்வது, எங்களுக்கு ஒரே கொள்கை தான். எங்களுக்கு நில வேண்டும். மக்கள் வாழ்ந்தாலும் வாழவில்லை என்றாலும் எங்களுக்கு தேவையில்லை என்று கூறிவருகிறார்கள். விவசாயிகளை வஞ்சித்து இந்த என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை. அடுத்த ஆலோசனைக் கூட்டம் பின்னர் அறிவிப்பார் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். மூன்றாம் சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், 'நிலக்கரி சுரங்கங்களுக்கு நிலத்தை கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். உள்ளூரில் இருக்கும் புரோக்கர்களைக் கொண்டு அந்த இடங்களை கையகப்படுத்த நினைக்கிறார்கள், என்.எல்.சி நிறுவனம். என்எல்சி நிறுவனம் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை நிரந்தர வீடு அளிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் இறையன்பு மீண்டும் என்எல்சி நிறுவனத்திடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். அடுத்த கூட்டத்தில் நல்ல பதிலைத் தருகிறேன் என்றும் தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திடம் ஆலோசனை நடைபெறும் வரை, இடத்தை கையகப்படுத்துவது கூடாது என்றும்; இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் தெரிவித்துள்ளோம். கருவெட்டி, கீழ் வளையம்மா தேவி, மேல் வளையம்மாதேவி, கத்தாழை போன்ற இடங்களுக்கு மட்டும் இடம் தருவதாக மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்’ என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், ''எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், விவசாயிகளின் சார்பாக நான் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் தேவை இல்லை. அதை நான் கடிதம் மூலம் கொடுத்துள்ளேன்.
இந்த நிறுவனங்களால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அதிகமாக உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.
என்.எல்.சி நிறுவனம் அப்பகுதியில் வருவதற்கு முன்பு நிலத்தடி நீர் 08 அடியில் இருந்தது. தற்போது 1000 அடியில் இருக்கிறது.
1989 வரை தான் என்எல்சி நிறுவனம் மூலம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நிரந்தர வேலை கொடுத்துள்ளார்கள். பிறகு ஒருவருக்கு ஒரு கூட நிரந்தர வேலை கொடுக்கவில்லை. தற்காலிகமான வேலை தான் கொடுத்துள்ளார்கள்.
இதுசம்பந்தமாக கடந்த ஆண்டு அதிகமான போராட்டங்கள் நடத்தினோம். பொதுக் கூட்டங்களை நடத்தி உள்ளோம். மேலும் 100 விவசாய சங்கங்களை கூட்டி என்எல்சி நிறுவனம் ஆபத்தானது என்னும் நிலையை எடுத்துக் கூறினேன்.
மொத்தம் 09 சுரங்கங்கள் உள்ளது. அதில் ஏழு நிலக்கரிச் சுரங்கம் கடலூர் மாவட்டத்திற்கும் 01 நிலக்கரி சுரங்கம், அரியலூர் மாவட்டத்திற்கும், 01 நிலக்கரி சுரங்கம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது இதில் மூன்று சுரங்கங்கள் நடைமுறையில் இருக்கிறது. சட்டமன்றத்தில் கேள்வி கேட்டதற்கு நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார். 06 சுரங்கங்கள் காவிரி டெல்டா பகுதிகளில் வருகிறது. ஐந்து சுரங்கங்கள் திட்டமிட்டப் பகுதிகளில் வருகிறது. வீராணம் பகுதிக்கு புதிய நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. மேலும் 06 சுரங்கங்கள் தோண்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளேம். தற்போது வரை 13,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளார்கள். மேலும் 1,40,000 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் தரமாட்டோம் என்கிறார்கள். மொத்தமாக 1,50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நினைக்கிறார்கள். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தரமாட்டோம் என்று அப்பகுதியில் உள்ள ஆட்சியர்கள், காவல்துறைகள் வலுக்கட்டாயமாக கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களை சிரமத்திற்குள் உள்ளாக்கி வருகின்றனர்.
இது நெய்வேலி பிரச்னை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்னை. ஒவ்வொரு ஏக்கரும் நமக்கு முக்கியமானது. ஒன்று வரும் காலங்களில் விவசாயம் முக்கியமான ஒன்று. தற்போது கையகப்படுத்தும் சுரங்கங்கள் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட, மூன்று கிராமங்களில் தோண்டப்பட்டு வரும் சுரங்கங்கள்.
கடந்த 2020-யில் அந்த மூன்று கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்கள் என்று அரசு தெரிவித்திருந்தது. எங்கள் கோரிக்கை அப்பகுதியில் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

புதிய ஆறு சுரங்கங்கள் தோண்ட அரசு அனுமதிக்கக் கூடாது. எங்களுடைய நோக்கம் அப்பகுதியில் உள்ள மக்களைக் காப்பாற்றுவது தான். 2040-க்குள் 0 கார்பன் கொண்டு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டைச் சார்ந்த பிரச்சனைகள், இதற்கு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எல்.எல்.சி நிறுவனம் கடந்த 66 வருடங்களாக இருக்கிறது. இனி தேவை இல்லை.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதுமானது, என்.எல்.சி நிறுவனம் தரும் மின்சாரம் தேவையில்லை.

நெல் தரும் பூமியை அழிக்கக் கூடாது. எங்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. நாங்கள் சொன்ன கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டால் தான் எங்களுக்கு வெற்றி. நம்முடைய கடமை நல்ல காற்று, நல்ல நீர் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். அரசு ஒரு நல்ல முடிவை தரவில்லை என்றால், பின்னர் நாங்களே களத்தில் இறங்கி போராட்டம் செய்வோம். அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆட்சியராக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். வேளாண்மைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும். இப்படி விவசாயத்தை அழிக்கக் கூடாது.
நான் எப்பொழுதும் இயற்கை பக்கமும் தமிழ்நாடு பக்கம் தான். நில உரிமையாளர்கள் 10 சதவீதம் மட்டும் தான். அதன் தொழிலாளர்கள் தான் 90 சதவீதம் இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை சென்றால் அவர்கள் அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு நிலத்திற்கு இழப்பீடு கொடுப்பது, ஒரு தாயைக் விற்பதற்குச் சமம். இது போன்ற நிகழ்வு நடைபெற்றால் அடுத்த தலைமுறைக்கு சாப்பாடு கிடைக்காது.
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் முருகன் பெருமானுக்குச் சென்றுவிடும். அதாவது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்று விடும்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனிமவளக்கொள்ளையைத் தடுத்த VAO - தருமபுரியில் டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.