ETV Bharat / state

சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில்  97 தீர்மானங்கள் நிறைவேற்றம் - தீர்மானங்களை பொறுத்த வரையில் அதில் சிலவற்றை

சென்னை மேயர் பிரியா தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை மேயர் தலைமையில் இன்று நடந்த மாமன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

author img

By

Published : Sep 29, 2022, 5:51 PM IST

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செப்.29) நடைபெற்றது. இதில் துணைமேயர் மகேஷ்குமார், மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சிலவற்றை காணலாம். சொத்து வரி செலுத்துவதற்கு நாளையே இறுதி நாளாக உள்ள நிலையில் சொத்து வரி சீராய்வின்படி அரையாண்டு முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு முறை மட்டும் 2% தனி வட்டி விதிப்பில் இருந்து தளர்வு அளிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.12 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி சீராய்வு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன. தற்போது வரை ரூ.6.90 லட்சம் சொத்து உரிமையாளர்களால் முழுமையாக வரி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் ரூ.6.25 லட்சம் சொத்துரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தப்பட வேண்டிய நிலையில் தனி வட்டி விதிப்பிலிருந்து விளக்களிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்டலம் 13 வார்டு 173 அடையார் காந்தி நகர் கால்வாய்க்கறை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்ட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டலம் 10இல் குறிப்பிட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி நிலத்தினில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப்பணிகளை மேற்கொள்ள உள்நுழைவு அனுமதி வழங்கும் தீர்மானம் மற்றும் மண்டலம் 13 வார்டு 176 ஊரூர் வண்ணாந்துறையில் உள்ள சலவை கற்கள் பயன்பாட்டிற்கான வாடகை நிர்ணயம் செய்யும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 1,3,6,7,11,14,15 ல் மாநகராட்சிக்குட்பட்ட காலியாக உள்ள திறந்தவெளி நிலங்களில் புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை அமைக்கவும் மேம்படுத்தும் பணிகளுக்காக ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் 315 பூங்காக்கள் மற்றும் 91 விளையாட்டு திடல்கள் புதிதாகவும் மேம்படுத்தப்பட உள்ளன.

அனைத்து மாநகராட்சிகளை வர்த்தக வரவுகள் தள்ளுபடி முறை தளர்த்தல் அமைப்பில்(TReDS)கட்டாயமாக பங்கேற்க உத்தரவிட்டு உள்ள அரசாணையை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பள்ளி மாணவ மாணவியர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று சிறந்த தொழில் சார்ந்த உயர்கல்வியில் சேர்ந்து பயில சிறப்பு பயிற்சி பள்ளி அளிக்க மாதிரி பள்ளிகளை உருவாக்கி அப்பள்ளிகளில் உட்காட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாறுபாடு உள்ள கட்டடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் கட்டிடம் அளவீடு செய்து வருவாய் பெருக்க ஒப்பந்த புள்ளிகள் கோரும் தீர்மானமும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தி வரும் பல்வேறு வகையான வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் ஃப்யூயல் சென்சார் கருவிகளை பொருத்தி மூன்று வருட காலத்திற்கு பராமரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக 25 எச்பி திறன் கொண்ட 10 எண்ணிக்கை நீர் இறைக்கும் பம்புகளை கொள்முதல் செய்வதற்கான தீர்மானம். கொளத்தூர் பிரதான சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த 53 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கும் பயனாளிகளின் பங்கீட்டு தொகையை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு செலுத்த அரசிடம் அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்... விலகிய கெலாட்... சசி தரூர், திக் விஜய் சிங் வேட்புமனு தாக்கல்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.