சென்னை: தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.
ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிருஸ்துவ மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல், படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான்.
ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இப்படத்திற்க்கு ஜாக்ஸன் விஜயன் மற்ரும் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வனை எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச்சென்றுள்ளார்' - மணிரத்னம்!