ETV Bharat / state

தமிழகத்தில் என்ஐஏ சோதனை நிறைவு - குற்றவாளிகளைப் பிடித்து தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் - ரூ 5 லட்சம் சன்மானம்

தமிழகத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என என் ஐ ஏ அறிவித்துள்ளது.

குற்றவாளிகளை பிடித்து தருபவர்களுக்கு ரூ 5 லட்சம் சன்மானம்
தமிழகத்தில் என்ஐஏ சோதனை நிறைவு
author img

By

Published : Jul 23, 2023, 7:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 21 இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானதையடுத்து தமிழ்நாட்டில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

அதேபோன்று தஞ்சை, மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் சோதனை முடிவுற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சில மதத் தலைவர்களை கொலை செய்யும் நோக்கில் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதன் அடிப்படையில் சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் தமிழக பகுதியான ஈரோடு மாவட்டம், சத்தியமங்களத்தில் கைது செய்யப்பட்டார். அதன் அடிப்படையிலும் தமிழகத்தில் தஞ்சை, மதுரை, நெல்லை, திருப்பூர், விழுப்புரம், கும்பகோணம், திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்தது.

இதையும் படிங்க: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - புதுக்கோட்டை, திருப்பூரில் என்ஐஏ சோதனை!

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனைகள் தற்போது நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஹார்ட் டிஸ்க், செல்போன்கள், சிம்கார்டுகள் என முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 18 நபர்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 5 பேர் இன்னும் பிடிபடாமல் தலைமுறைவாக இருந்து வருகின்றனர். அவர்களைப் பிடிப்பதில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அதன் அடிப்படையில் இன்று தஞ்சாவூர், மதுரை,நெல்லை, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேல் சோதனை மேற்கொண்டனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் சோதனைகளில் ஈடுபட்டதில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் வீட்டிலும் காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக கும்பகோணம், திருபுவனம், திருமங்கலக்குடி, பாபநாசம் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: CM Stalin letter: வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்!: தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.