ETV Bharat / state

விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு; 13 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

விழிஞ்சம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 16, 2023, 10:59 PM IST

சென்னை: விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 13 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்ய முயற்சித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்த 10 இலங்கை நாட்டவர்கள் உட்பட 13 பேர் உதவியது அம்பலம் ஆகியுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் தங்க கட்டிகளாக ஹவாலா முறையில் சென்னை மற்றும் இலங்கை இடையே பரிமாற்றம் நடந்துள்ளதும், கிரிப்டோ கரன்சி மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் விவகாரம்: கேரள மாநிலம், விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை ரோந்துப் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் விழிஞ்சம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி விழிஞ்சம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஆயுதக் கடத்தல் விவகாரம் என்பதால் இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணையைத் துவங்கினர்.

சென்னை பகுதியில் NIA விசாரணை: சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சர்குணம் (எ) சபேசனான இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவர் இருந்த இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் (Liberation Tigers of Tamil Eelam - LTTE) தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிரவாத கும்பலுடன் தொடர்பு: மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில், சேலையூர் கேம்ப் குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மண்ணடி, ஈ.சி.ஆர் உட்பட 9 இடங்கள் மற்றும் திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து ஈரான் துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை கொண்டு வந்து, இலங்கை படகில் கடத்தப்பட்டதால் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தியா, ஸ்ரீலங்கா இடையே போதை பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் செய்ய திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டதும், அதற்காக சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

10 இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 13 பேர் கைது: இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று இந்தியர்கள் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் 10 பேர் என 13 பேர் மீது தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். விக்னேச பெருமாள் என்ற விக்கி, ஐயப்ப நந்து, செல்வகுமார் ஆகிய மூன்று இந்தியர்களும் மற்றும் குணசேகரன் என்ற குணா, பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்ப ராஜா, முகமது அஸ்மின், அழகப் பெருமாக சுனில் காமிணி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுக்கா ரோஷன், லடியா என்கிற நளின் சதுரங்க, வெள்ள சுரங்கா என்கிற கமகே ஸ்வரங்கா பிரதீப், திலீபன் என்கிற தனர்தனம் நிலுக்கூஷன் ஆகிய 13 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

whatsapp மூலம் போதைப்பொருட்கள் வியாபாரம்: இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஜி சலீம் பல்வேறு வெளிநாட்டு whatsapp எண்களை பயன்படுத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் வியாபாரத்தை வெகு விமர்சையாக நடத்தியது தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்க முடியாத வண்ணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போதைப் பொருள் கடத்தலின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை வைத்துக் கொண்டு சொகுசான வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து பல மொபைல் போன்கள் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது அது மட்டுமல்லாது டிஜிட்டல் ஆவணங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கான ஆவணங்கள் 80 லட்ச ரூபாய் லோக்க பணம் ஒன்பது தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

13 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்: பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவை இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்காக ஹவாலா முறையில் சென்னையிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் செய்ய பணப் பரிவர்த்தனைக்கு கிரிப்டோ கரன்சியும் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கொண்டு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை புத்துயிர் பெற செய்வதற்காக, இந்த 13 பேரும் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளதாக இன்று (ஜூன் 16) குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு: NIA சிறப்பு நீதிமன்றத்தில் 9 இலங்கைத் தமிழர்கள் ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.