மயிலாடுதுறை: கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே ஒரு காரை வழி மறித்து விசாரித்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் பாஷா, ஜவஹர் அலி, முகமது ஆஷிக், முகமது இர்பான், ரஹ்மத் ஆகியோர் என்பது தெரியவந்தது. சாதிக் பாஷா கிளாபா பார்ட்டி ஆப் இந்தியா, ஐ.எஸ்.ஐ போன்ற அமைப்புகளை தொடங்கி பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டு, மயிலாடுதுறையில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் நேற்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் 16 டிஜிட்டல் ஆவணங்கள், 6 ஆயுதங்கள், மெட்டல் ராடு, இரண்டு தற்காப்பு கலைக்கருவி, கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அண்ணா சாலையில் சாதிக் பாஷா நடத்தி வந்த நிறுவனத்திற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் 5 இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு!