ETV Bharat / state

NIA-வை எச்சரித்த உயர்நீதிமன்றம்! - காரணம் தெரியுமா? - latest tamil news

தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு எதிரான வழக்கில், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

NIA arrest two advocate under anti terrorist act  if found violate actions initiate
வழக்கறிஞர்கள் கைது விவகாரம்
author img

By

Published : May 25, 2023, 4:12 PM IST

Updated : May 25, 2023, 4:40 PM IST

சென்னை: தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் என எச்சரித்து உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ, மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு, நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் முகமது அப்பாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் தமது மனுவில், என்.ஐ.ஏ.வுக்கு எதிராக முகநூலில் சில கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காகவும் தம்மீது வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளதாகவும். எனவே விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என முகமது அப்பாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரான தான் தனது தொழில் ரீதியான பணிகளை செய்ததற்காகவே என்ஐஏ அதிகாரிகளால், தவறான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் முகமது அப்பாஸ் தமது மனுவில் கூறியிருந்தார்.

ஆனால் என்ஐஏ தரப்பிலான பதிலில் போதுமான ஆதாரங்கள் கிடைத்ததால் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆதாரங்கள் குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்து விட்டு, அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் முன், அரிவாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வேறொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகளின் மேற்கண்ட செயல்பாடுகளின் மூலம் வழக்கு என்பது ஜோடிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதனை தள்ளுபடி செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இவ்வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அதை இந்த நீதிமன்றம் தீவிரமாக கருதும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், இருப்பினும் என்.ஐ.ஏ. தரப்பு விளக்கத்தை கேட்காமல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்பதால், மனுவுக்கு பதிலளிக்கும்படி என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: "ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல்" - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

Last Updated : May 25, 2023, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.