இது குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாற்று வழியில் கற்பிப்பதற்கும் கற்றல்திறனை மேம்படுத்துவதற்கும் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்.
இதன் அடிப்படையில், மாணவர்களிடம் கற்றல்திறன் மேம்பாடு, விளையாட்டு மேம்பாடு, கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் தனியார் தொண்டு நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும், அதற்கான அறிவுரைகளை வழங்கவும் சம்பந்தப்பட்டப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
மேலும் இது மாணவர்களுக்கு பாடவேளை, தேர்வு காலம் ஆகியவற்றைப் பாதிக்காத வகையில் அனுமதிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கு பள்ளிகளில் அனுமதி அளிக்கும் செயல்களில் தலைமையாசிரியர்கள் தாமதம் செய்ய வேண்டாம்.
தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பொழுது அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க
முதுகலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு '5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு கோரப்பட்டுள்ளது'