1.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (டிசம்பர் 09) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
2. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (டிசம்பர் 9) ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
3. புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வுமேற்கொள்கிறார்.
4. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே அரசுமுறைப் பயணமாக இன்றுமுதல் வரும் 14ஆம் தேதிவரை, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.