- ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்:
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் எந்த இடத்தில் வசித்தாலும்; அங்கு இருக்கக் கூடிய ரேஷன் கடைகளில் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.
- பெரிய கோயில்களின் உபரி நிதி விவகாரம்- வழக்கு விசாரணை இன்று:
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமக் கோயில்களின் மேம்பாட்டுக்காக பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை செலுத்தும்படி அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
- அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் விசாரணை:
சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திமுகவும், அறப்போர் இயக்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
- போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் - மனு மீதான தீர்ப்பு இன்று
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
- ஐபிஎல் 2020 இன்று: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்
இன்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.