ETV Bharat / state

செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்புகள் 2020-2021 - தமிழ்நாடு சட்டப்பேரவை 2020-21

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-2021 ஆண்டுக்கான செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

tamilnadu-assembly
tamilnadu-assembly
author img

By

Published : Mar 23, 2020, 5:14 PM IST

  • மாவட்ட தலைநகரில் பணிபுரியும் தகுதிவாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப்படும்.
  • சுவாமி சகஜானந்தா, ராமசாமி படையாட்சியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோர்களின் பிறந்தநாள் விழாக்கள் ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் செலவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • சென்னை தியாகராய நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லம் ரூ.7 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்.
  • சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வாஉசி செக்கு சீரமைத்தல், ராஜாஜி நினைவாலயம் மற்றும் ராஜாஜி நூலகம் அமைத்தல் மற்றும் மின் பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை கலைவாணர் அரங்கம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.16 லட்சம் செலவில் பொருத்தப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகம் பல்நோக்கு கலையரங்கம் ரூ.12 லட்சம் செலவில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்படும்.
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகம் இரண்டும் ரூ.17 லட்சம் லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  • எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் இரண்டாவது தளம் புதிதாக கட்டப்படும்.
  • எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் மாணவர்களின் படப்பிடிப்பு தளத்தில் புதிய அரங்க அமைப்புகள், ஒளியமைப்பிற்கான பாதுகாப்பு நடைமேடை ரூ.22 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • தலைமை செயலகத்தில் உள்ள மேற்கோள் பிரிவில் கணினி, பிரிண்டர் ஸ்கேனர் போன்ற நவீன கருவிகளுடன் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்படும்
  • மேற்கொள் பிரிவில் செய்தி நறுக்குகள் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் செலவில் தொகுப்பு புத்தகமாக பைண்டிங் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.
  • தலைமை செயலகத்தில் உள்ள ஊடக மையம் ரூ.14 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கி அதன் மூலம் மேம்படுத்தப்படும்
  • தமிழரசு அச்சகத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்களுக்காக்க ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய உணவு அருந்தும் அறை கட்டப்படும்.
  • தமிழரசு அச்சகத்தில் கணினியிலிருந்து தட்டுக்கள் உருவாக்கும் இயந்திரம் அமைந்துள்ள அறையின் மேற்கூரை சீரமைத்தல் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவரை உயர்த்துதல் ஆகிய பணிகள் ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு நடத்தப்படும் சாலை ரூ.20 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  • எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் பயன்பாட்டிற்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நாற்காலிகள் வாங்கப்படும்.

இதையும் படிங்க: 1.88 கோடி மதிப்பில் 21 புதிய அம்மா மருந்தகங்கள் - பேரவையில் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.