ETV Bharat / state

'புதிதாக 4 லட்சம் பேர் காவலன் செயலி பதிவிறக்கம்’ -  விஸ்வநாதன் - chennai commissioner viswanathan

சென்னை: காவலன் செயலியை மேம்படுத்த பெண்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

commissioner viswanathan participated in  kavalan app awarness program held at private college
காவல் ஆணையர் விஸ்வநாதன்
author img

By

Published : Dec 19, 2019, 6:23 PM IST

தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து காவலன் செயலியைக் குறித்து கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரிடமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு செயலி எவ்வாறு பதிவிறக்கம் செய்து அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாதன், "தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மற்றப் பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளது. அதைவிட குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

பெண்களுக்கு எங்கு ஆபத்துகள் ஏற்படுகிறது, யாரால் ஏற்படுகிறது போன்றவை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். மேலும் காவலன் செயலியை மேம்படுத்த பெண்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அச்செயலியை புதியதாக நான்கு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன்

இதையும் படியுங்க:

காவலன் செயலி - 5 வினாடிகளில் ஆஜராகும் காவல்துறை!

Intro:பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த பெண்கள் ஆலோசனை கூறலாம் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
Body:தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி படுத்தும் விதமாக தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காவலன் என்ற செயலியை குறித்து கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மதுரவாயலில் தனியார் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இதில் மாணவர்களுக்கு செயலி எவ்வாறு பதிவிறக்கம் செய்வது எப்படி அதனை பயன்படுத்த வேண்டும் என விளக்கங்கள் அளிக்கப்பட்டனConclusion:அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மற்ற பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளது குறைவாக உள்ளது என்பதை விட குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.பெண்களுக்கு எங்கு ஆபத்துகள் ஏற்படுகிறது யாரால் ஏற்படுகிறது.போன்றவை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் மேலும் காவலன் செயலியை மேம்படுத்த பெண்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவலன் செயலியை தமிழகத்தில் புதியதாக 4லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.