சென்னை: உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில் தேவலாயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதனொரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை வெஸ்லி தேவலாயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. 2023 ஆண்டை வரவேற்கும் விதமாக மக்கள் நள்ளிரவு பிரார்த்தனையில் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு இறைவழிபாடு மேற்கொண்டனர்.
கரோனா தாக்கம் குறைந்து உலக மக்கள் அனைவரும் அன்பும் சமாதனமும் பூண்டு சமத்துவமாக வாழ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டதாக பிரார்த்தனையில் பங்கு பெற்றவர்கள் தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வெஸ்லி தேவலாயம் பங்கு தந்தை தேவ பிரசாத், "2022ஆம் ஆண்டை கடந்து புதிய ஆண்டை நாம் கண்டிருக்கிறோம்.
இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நலனையும் தரும் என்று நம்புகிறோம். உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். மீண்டும் கொரோனாவின் தாக்கம் வெளிநாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கரோனா போன்ற கொடிய தொற்று சாதரணமாக மாறி போக வேண்டும் என ஆதாரனை செய்துள்ளோம்" என கூறினார்.
இதையும் படிங்க:New year 2023: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்