ETV Bharat / state

பொறியியல் படிப்பிற்கு புதிய பாடத்திட்டம்:வரும் 12ஆம் தேதி கல்விக்குழு கூட்டத்தில் அனுமதி! - பொறியியல் பதிப்பு பாடத்திட்டம்

பொறியியல் படிப்பிற்கான புதிய பாடத்திட்டம் வருகிற 12ஆம் தேதி நடைபெற உள்ள கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பிற்கு புதிய பாடத்திட்டம் 12 ந் தேதி கல்விக்குழு கூட்டத்தில் அனுமதி

author img

By

Published : Aug 9, 2022, 8:14 PM IST

சென்னை: பொறியியல் படிப்புகளைத் தொழில்துறைக்கு ஏற்ப வடிவமைத்துள்ள பாடத்திட்டத்திற்கு 12ஆம் தேதி நடைபெற உள்ள கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து நடப்புக்கல்வியாண்டு முதல் தொழில்துறையினருக்கு ஏற்பத்தயார் செய்யப்பட்ட பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021 - 2022ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களும் புதிய பாடப்பிரிவை படிக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் எந்தப்பாடப்பிரிவில் படித்தாலும் கம்ப்யூட்டர் அறிவை பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறையினருக்குத்தேவையான திறன்களை வளர்க்கும் வகையிலும், படிக்கும்போது திறன்பயிற்சிகளை அளிப்பதுடன், தொழிற்சாலைகளில் நேரடிப்பயிற்சி பெறும் வகையிலும் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற வரும் 12ஆம் தேதி கல்விக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 18ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்போது புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது’’ எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: அனைவர் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுரை - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.