ஐசிஐசிஐ மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆகிய வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமலாகவுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதில் ஏடிஎம் கட்டணம், மாதச்சம்பளம் பெறுவது, மாதத்தவணை செலுத்துவது, சேவைக் கட்டணம் போன்றவற்றில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் புதிய விதிகள் அமலாகின்றன.
மேலும் வங்கிகளில் வேலை நாட்களில் மட்டும் இயங்கி வந்த, தேசியத் தானியங்கி பணப்பரிவர்த்தனை முகமை (NACH) இன்று (ஆகஸ்ட் 1) முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவித்துள்ளது.
இதனால் வேலை நாட்களில் மட்டும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இதன்மூலம் சம்பளம், ஓய்வூதியம், தவணைக் கட்டணங்கள் போன்றவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கணக்கில் வரவு வைக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அதிரடியாக தெரிவித்துள்ளது.
மின், எரிவாயு, தொலைபேசிக்கட்டணம் செலுத்தவும் நடவடிக்கை
இதனைத்தொடர்ந்து மின், எரிவாயு, தொலைபேசிக்கட்டணம் போன்றவற்றை, அனைத்து நாட்களிலும் செலுத்துதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
மேலும் ஏடிஎம்-களில் பணப்பரிமாற்றத்திற்கு வசூலிக்கப்பட்ட ரூ.15 கட்டணம், தற்போது 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பணமில்லா மற்ற பரிமாற்றத்திற்கான ரூ.5 கட்டணம், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.6 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சம்பளத்திற்கான வங்கிக்கணக்கில் இருந்து இலவசப் பரிவர்த்தனைகளுக்கு பிறகான, ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 150 ரூபாய்க் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் ஒரு ஆண்டிற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை எனவும், அதற்கு மேற்பட்ட 10 காசோலைகளை கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும், ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1இல் அமல்., ஏடிஎம் கட்டண உயர்வு ஏன்? ரிசர்வ் வங்கி விளக்கம்