அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், அத்துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், துறை சார்ந்த அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்திவருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்புக் கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த வருடம் ஜூலை 18ஆம் தேதி சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் அறிவித்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 3 கோடியே 75 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஜூலை 15) அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சேவூர் எஸ். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காமராஜ் பிறந்தநாள் விழா- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து