ETV Bharat / state

கோயில்கள் முன்பு வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை! - high court news in tamil

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, கடந்தாண்டு போலவே கோயில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

New regulations for vinayagar immersion, Hr&ce report before MHC
கோயில்கள் முன்பு வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை
author img

By

Published : Sep 6, 2021, 12:13 PM IST

சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, விநாயகர் சிலை ஊர்வலங்கள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொது வெளியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டைப் போலவே சிறிய கோயில்களின் முன்பு வைக்கப்படும் சிலைகளை, இந்து அறநிலையத்துறை எடுத்து நீர்நிலைகளில் கரைக்கும் என்றும் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டும் - நயினார் நாகேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.