தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த சோமநாதன் ஐ ஏ எஸ் மத்திய அரசு பணி காரணமாக வேறு பகுதிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இதனால், ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மை செயலர்/ஆணையராக இருக்கிறார்.
துணை தலைவராக பங்கஜ் குமார் பன்சால், செயலாளராக மைதிலி கே. ராஜேந்திரன், இணை செயலாளர்களாக ஜெகநாதன், லட்சுமி பிரியா, பொருளாளராக கிருஷ்ணன் உன்னி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செயற்குழு உறுப்பினர்களாக எம். எஸ். சண்முகம், பூஜா குல்கர்னி, ராஜாராமன், நந்தகுமார், ஏ. ஆர். ராகுல்நாத், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேகநாத ரெட்டி, கார்த்திகேயன், கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவு உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:
நதிநீர் பங்கீடு; தமிழ்நாடு - கேரளா அலுவலர்கள் நாளை சந்திப்பு