சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒரு வாரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு நீட் தேர்வினை எழுத முடியும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் கருதி அமெரிக்க நிறுவனம் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு குறித்து, எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்கும்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரமான கல்வியை அளிப்பது குறித்து ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை