ETV Bharat / state

'சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன்' - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

தாம்பரத்தின் மேயர் வேட்பாளராக வசந்த குமாரி திமுகவினரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக் இணையாக தாம்பரம் மாநகராட்சி தரத்தை உயர்த்துவேன் - தம்பரம் மேயர்

author img

By

Published : Mar 3, 2022, 7:17 PM IST

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் பிரிக்கப்பட்டு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பெருவாரியான இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றன. இதனால் தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவியை திமுகவே கைப்பற்றியது.

தாம்பரத்தின் புதிய மேயர் வேட்பாளர்

ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி 32ஆவது வார்டில் போட்டியிட்ட வசந்தகுமாரி என்பவர் தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன் - மேயர் வேட்பாளர்

அதேபோல் துணை மேயராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் உறவினரான ஜி.காமராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேயராக அறிவிக்கப்பட்ட வசந்தகுமாரி, திமுக முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

அப்போது நம்மிடம் கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சர் என்னை மேயராகத் தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். எங்கள் குடும்பம் 42 ஆண்டுகளாக திமுகவில் உள்ளது. தற்போது என்னை மேயராக அறிவித்தது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.

தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சிக்காக எந்தந்த வளர்ச்சிப்பணிகள் தேவையோ அதை அனைத்தையும் செயல்படுத்துவேன். சென்னை மாநகராட்சிக்கு இணையாகத் தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:'நாடு திரும்பிய உக்ரைன் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.