ETV Bharat / state

காணாமல் போகும் குழந்தைகளை அடையாளம் காண புதியவழி - ரயில்வே டிஎஸ்பி யோசனை! - காணாமல் போகும் குழந்தைகள்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இனிவரும் காலங்களில் குழந்தைகள் கைகளில் அவர்களின் சுய விவரங்கள் அடங்கிய பேண்ட் வழங்க உள்ளதாக ரயில்வே டிஎஸ்பி முருகன் தெரிவித்துள்ளார்.

missing child
author img

By

Published : Jul 17, 2019, 12:07 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த தம்பதி, தங்களது குழந்தையுடன் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தனர். ரயில் வர தாமதமானதால், தம்பதிகள் இருவரும் அசந்து தூங்கியுள்ளனர். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் பிளாட்பாரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்று வயது குழந்தையை கடத்தி சென்றார். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது குழந்தையை காணததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவந்த நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அந்த நபர் குழந்தையுடன் நிற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காணாமல் போன குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படையினர்

இந்நிலையில், இது குறித்து ரயில்வே டிஎஸ்பி முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், குழந்தையை கடத்திச் சென்ற நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகள் பெரிதும் உதவின. இதன்மூலம் தனிப்படையினர் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த அந்நபரை கைது செய்தனர்.

காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமானது. இனி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தலை தடுக்க ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளின் கையில், அவர்களது முழு விவரம் அடங்கிய பேண்ட் அணிவிக்கப்படும். இதை வைத்து குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது கடத்தப்பட்டாலோ அவர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் என்றார்.

Intro:Body:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இனிவரும் காலங்களில் குழந்தைகள் கைகளில் அவர்களின் விவரங்கள் அடங்கிய பேண்ட் வழங்க உள்ளதாக ரயில்வே டிஎஸ்பி பேட்டி*

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவை சேர்ந்த 3 வயது குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக போலீசார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் முடிவாக கடத்தப்பட்ட 3 வயது குழந்தை இன்று திருப்போரூரில் பேருந்து நிலையம் அருகில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக ரயில்வே டி.எஸ்.பி. முருகன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்...

அப்போது அவர் கூறுகையில் ;

சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தீவிர விசாரணை மேற்கொண்டு அடையாளம் கண்டோம்.

குழந்தையை கடத்திச் சென்ற நபரை தனிப்படை அமைத்து தேடுதல் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குழந்தையை திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மீட்டோம்.

அங்கு குழந்தை அனாதையாக இருந்தது. குழந்தையை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை மற்றும் தமிழக காவல் துறை கூட்டு முயற்சியால் மட்டுமே குற்றவாளியை மிகக் குறுகிய காலத்திற்குள் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

குழந்தையை கடத்தி அனாதையாக விட காரணம் என்ன என கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்து வருகிறோம்.
குழந்தையை பறிகொடுத்தவரும், கடத்தியவரும் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பதால் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி சென்டரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கையில் குழந்தைகளின் தாய் தந்தை விவரங்கள் மற்றும் குழந்தையின் விவரம் அடங்கிய பேண்ட் ஒன்றும் அணிவிக்கப்படும் முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்.

அதை வைத்து குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது கடத்தப்பட்டாலும் மிகவும் எளிய முறையில் அவர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் என்றும் ரயில்வே துறை டிஎஸ்பி முருகன் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.