ETV Bharat / state

ஹைடெக்காக மாறிய சென்னை ஏர்போர்ட்.. பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்! - Green Rating for Integrated Habitat Assessment

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ஒருங்கிணைந்த முனையங்களின் முதல் ஃபேஸ் கட்டிடப் பணிகள் நிறைவடைந்து அதில் அதி நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சோதனை அடிப்படையில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சோதனையானது 10 நாட்கள் நடைபெறும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

a
Etv Bhaarat
author img

By

Published : Mar 8, 2023, 6:02 PM IST

சென்னை: சென்னை விமான நிலையம் ரூ.2,400 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதி நவீன ஒருங்கிணைந்த விமான நிலையங்களாக உருவாகி வருகிறது. இந்தப் பணி 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதன் முதல் ஃபேஸ் கட்டிடங்கள் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் நிலங்கள் கையகப்படுத்துவது தரையில் பாறைகள் இருந்தது மற்றும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

இந்த நிலை தற்போது முதல் ஃபேஸ் கட்டிடப் பணி நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அந்த கட்டிடத்தில் நவீன கருவிகள் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டிடம் 5 தளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பேஸ்மெண்ட் பயணிகளின் உடமைகளை கையாளுதல் பகுதியாவும், தரைதளத்தில் சர்வதேச விமான பயணிகள் வருகை பகுதியாகவும், இரண்டாவது தளத்தில் புறப்பாடு பயணிகள் பகுதியாகவும் அமைக்கப்படுகின்றன. மற்ற தளங்களில் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறைகள், வணிக வளாகங்கள், மற்றும் அலுவலக பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டிடத்தில் பேஸ்மெண்ட் பகுதியில் பயணிகளின் உடைமைகளை கையாளும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று முதல் வரும் பத்தாம் தேதி வரை சோதனை அடிப்படையில் பயணிகளின் உடைமைகள் அங்கு கையாளப்படும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "தற்போது கட்டி முடிக்கப்பட்ட முதல் பேஸில் அதி நவீன கருவிகளில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்படும்போது தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள் போன்ற பொருட்கள் இருக்குமேயானால், தானியங்கி முறையில், சர்ச்சைக்குரிய அந்த உடமையை தனியே தள்ளி வைக்கும் முறை இந்த நவீன கருவிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக முதற்கட்டமாக இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம் என்ற மூன்று இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் பரிசோதனை நடப்பதால் பயணிகளின் உடைமை தாமதம் இன்றி துரிதமாக விமானத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அதி நவீன சிஸ்டம் படி பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கும் போது பயணிகள் அந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. பயணிகள் காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்து வீடியோ மூலம் தங்களுடைய உடமைகள் பரிசோதனையை கண்காணிக்கலாம்.

அந்த நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது இருந்தால் அதை தானியங்கி இயந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அபாயகரமான ஆயுதங்கள், போதை வஸ்துகள் போன்ற பொருட்கள் இருக்குமேயானால், அப்போது மட்டும் சம்பந்தப்பட்ட பயணியை அப்பகுதிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய முனையத்தில் பயணிகளின் செக்கின் கவுண்டர்கள் 140 அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பு சோதனை அனைத்தும் துரிதமாக நடைபெற்று நீண்ட நேரம் காத்திருக்காமல் விமானத்துக்கு செல்ல முடியும்" என்று கூறினார்.

  • Chennai Airport New Integrated Terminal Building Update 25 |
    The new terminal aligns with the #GRIHA standards. GRIHA (Green Rating for Integrated Habitat Assessment) is a rating system developed to evaluate the environmental performance of buildings and habitats. #ChennaiAirport pic.twitter.com/bmr28THhJC

    — Chennai (MAA) Airport (@aaichnairport) March 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அதி நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் 10 ஆம் தேதி வரை நடைபெற்று சோதனை முறை வெற்றிகரமாக முடிவடைந்தால் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். ஐந்து தளங்களுடன் வடிவமைக்கப்பட்டு அதி நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சென்னை விமான நிலையம் மேலைநாட்டு விமான நிலையங்களை விட சிறப்பான முறையில் அமைக்கப்படுகிறது.

மேலும் இயற்கை அழகுடன் கூடிய சூரிய ஒளிக்கதிர்கள், விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வரும்படியும், பனை மரங்கள் வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டு, கலையின் நுட்பத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு அதி நவீன சொகுசு இருக்கைகள், சாய்வு இருக்கைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன" இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஐந்து தளங்களிலும் கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்த பின்பு இந்த முதற்கட்ட ஃபேஸ் கட்டிடம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இந்தக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சர்வதேச முணையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பின்பு அங்கு ஃபேஸ் இரண்டுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி.. விமானத்தில் நடந்து என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.