32 மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்து, மாவட்டங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன .
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37லிருந்து 38ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் அரசு பணிகளை மேற்கொள்வதற்கான காலிப்பணியிடங்கள் உருவாகும் சூழல் ஏற்படவுள்ளது. குடிமைப் பணி உள்ளிட்ட அரசுப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, மேலும் சில புதிய மாவட்டங்கள் அறிவிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மக்களுடன் அரசும், அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டிய நேரமிது!