காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில், மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக, வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்