ETV Bharat / state

நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோபிநாத்..!

சுமார் 15 ஆண்டுகாலமாக காட்சி ஊடகத்தையும் சரி, பண்பலை ஊடகத்தையும் சரி தன் சரியான மொழி ஆளுமையால் கட்டி, அதில் ராஜாவாகத் திகழ்கிறார், தொகுப்பாளர் கோபிநாத். கோபிநாத்தின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோபிநாத்..!
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோபிநாத்..!
author img

By

Published : Jul 4, 2021, 1:41 PM IST

Updated : Jul 4, 2021, 8:10 PM IST

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையிலும் ஜெயிக்க ஒரு ரோல் மாடல் இருப்பர். அப்படி, எந்தவொரு துறையிலும் கால்பதிக்கும் இளைஞர்கள் பலருக்கும் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார், தொலைக்காட்சித் தொகுப்பாளர் கோபிநாத்.

குறிப்பாக, 90’ஸ் கிட்ஸ்களின் படிப்பு, காதல், பணி, பொருளாதாரத்தேடல், லட்சியம், கடும் உழைப்பு ஆகிய வாழ்வியல் பிரச்னைகளில் எங்கோ ஒரு நாள் கேட்ட கோபிநாத்தின் குரல் நிச்சயம் மனதிற்குள் சன்னமாய் ஒலித்துக்கொண்டிருக்கும். அது அவர்களின் வாழ்வை தெம்புடன் நகர்த்த சிறு மன விளக்கை ஏற்றியிருக்கும்.

அந்த அளவுக்கு கிட்டத்தட்ட ஒரு 15 ஆண்டுகாலமாக காட்சி ஊடகத்தையும் சரி, பண்பலை ஊடகத்தையும் சரி தன் சரியான மொழி ஆளுமையால் கட்டி, அதில் ராஜாவாகத் திகழ்கிறார், தொகுப்பாளர் கோபிநாத்.

ஆனால், அவர் இந்த இடத்தை மிக எளிதில் அடைந்துவிடவில்லை. பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

சாதாரணமாக வெற்றி கிடைக்காது

அடிப்படை வசதிகளுக்குப் பெரிதும் போராடவேண்டிய, மிகவும் பின் தங்கிய மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தின், அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த கோபிநாத் பணி நிமித்தமாக சென்னையை நோக்கி நகர்ந்தார்.

ஆரம்பத்தில் தான் பிடித்த பிபிஏ படிப்பிற்கு ஏற்ற உத்யோகம் கிடைக்காத நிலையில், மார்க்கெட்டிங் துறையில் பணிக்கு சேர்ந்த கோபிநாத் கிடைத்த வேலையை குறைவாக எண்ணாமல், தெருத்தெருவாக வீடு வீடாக சென்று புடவை விற்றிருக்கிறார்.

இருப்பினும், கோபிநாத்திற்குள் இருக்கும் ஊடக கனவு மட்டும் அவரைத் தூங்கவிடவில்லை. அவரைத் துரத்திக்கொண்டிருந்தது.

அதன் பலனாக, பல்வேறு ஊடகங்களின் வாசல்கள் திறந்தன. அதைத் தொடர்ந்து ராஜ் டிவி, ஜெயா டிவி, என்டிடிவி உள்ளிட்டப் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய பின், விஜய் டிவியில் இணைந்தார்.

அதன்பின் மக்கள் யார் பக்கம், நீயா நானா, நடந்தது என்ன? சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், கோபிநாத்.

நீயா நானாவின் அடையாளமாக மாறிய கோபிநாத்

'நீயா நானா' என்னும் நிகழ்ச்சியை பங்கேற்பாளர்களின் போக்கிற்கு ஏற்ப கொண்டு சென்று, இவர் வழிநடத்தும் விதம் கோபிநாத்தை பல்வேறு சாமானிய மக்களின் இல்லங்களில் கொண்டு போய் சேர்த்தது.

பத்தாதற்கு பண்பலை வானொலியில் தொகுப்பாளராகவும், நம்பிக்கை தரும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் நடிகராகவும் கோபிநாத், தன்னை எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.

தமிழ்ப்பற்றாளரான கோபிநாத், தனது செல்ல மகளுக்கு 'வெண்பா' எனப் பெயர் சூட்டி விளித்தார். இவர் எழுதிய 'நேர் நேர் தேமா, ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க' ஆகிய இரண்டு புத்தகங்கள் விற்பனையில் கணிசமான சாதனைப் படைத்தன.

எந்தவொரு பின்புலமும் இல்லாதவரின் வெற்றி

எந்தவொரு ஊடகப் பின்புலமும் இல்லாமல் காட்சி ஊடகத்திற்குள் தட்டுத்தடுமாறி நுழைந்து, தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேற்றிக்கொண்டு, பலருக்கும் நம்பிக்கைத் தரும் விளக்காய் இருக்கும் கோபிநாத், தமிழைச் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் வாழ்க்கையில் சோபிக்கமுடியாது என்னும் கட்டமைப்பை உடைத்து எறிந்து இருக்கிறார்.

இப்போது எந்தவொரு சமூக வலைதளங்கள் எடுத்தாலும் சரி, கோபிநாத்தின் பேச்சை உலகில் யாராவது ஒருவர், தன் வாழ்க்கை மேம்பட கொண்டுக்கொண்டே இருக்கின்றனர். அது தான் கோபிநாத்தின் வெற்றி.

பலருக்கும் நம்பிக்கையைப் பகரும் கோபிநாத்திற்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..!

இதையும் படிங்க: 'கரோனாவை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated : Jul 4, 2021, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.